எமரால்டு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது.......................

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை;

Update: 2025-05-28 15:52 GMT
நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உதகை, அவலாஞ்சி,எமரால்டு, எடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் எமரால்டு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது....................... நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது‌.இந்த நிலையில் உதகை,அவலாஞ்சி,எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர்மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல எமரால்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருவதால் சிற்றாறுகள்,நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து 184 கொள்ளளவு கொண்ட எமரால்டு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது. மேலும் தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மலைப்பயிர்கள் பயிரிட்டுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து வெள்ளப்பாதிப்புகள் ஏற்ப்பட்டு மலைப்பயிர்கள் சேதமடைந்து வருவதால்,அறுவடைக்கு தயாரான கேரட் போன்ற மலைக்காய்கறி பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News