சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,100-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று கைதிகள் அறையில் சிறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கருப்பசாமி என்ற கைதியிடம் இருந்து செல்போன் மற்றும் சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு எப்படி செல்போன் கிடைத்தது? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.