கலவை தர்ம சம்வர்த்தினி ஆலயத்தில் சிறப்பு பூஜை
தர்ம சம்வர்த்தினி ஆலயத்தில் சிறப்பு பூஜை;
கலவை ஸ்ரீ தர்ம சம்வர்த்தினி சமேத திருகாரிசநாதர் ஆலயத்தில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.