சோளிங்கர்: காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்தி குத்து
காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்தி குத்து;
சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகத்குமார், தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜனனி (வயது 15). 10-ம் வகுப்பு முடித்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால், ஜெகத்குமாரின் அக்கா மகள்களான லக்ஷயா (16), சரண்யா ஆகியோர் ஜெகத்குமார் வீட்டில் தங்கி வந்துள்ளனர். லக்ஷயா 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பாட்டியுடன் 3 பேரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி நிரம்பி விட்டதா என்று பார்ப்பதற்காக அவர்களின் பாட்டி சென்றுள்ளார். இந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வீட் டிற்குள் புகுந்து கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார்.பின்னர் மாணவி ஜனனியை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதனை லக்ஷயா தடுத்துள்ளார். இதில் அவருக்கு கையில் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதனால் அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு மாடியில் இருந்த பாட்டி கீழே இறங்கி பார்த்தபோது கதவு பூட்டப்பட்டி ருந்தது. இதனால் ரோட்டுக்கு சென்று அங்கிருந்த பொதுமக்களை அழைத்து வந்து கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜனனி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். லக்ஷயாவிற்கு கையில் பலத்த வெட்டு காயம் இருந்தது. அங்கு கத்தியுடன் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்தனர். பின்னர் இதுகுறித்து கொண்டபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசாரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். தொடர்ந்து உயிரிழந்த ஜனனியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்த லக்ஷயா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (21) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே பலமுறை ஜனனியிடம் அவரை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அதனை ஜனனி ஏற்க மறுத்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மாணவிகளை சரமாரியாக வெட்டியது தெரியவந்தது.இதுகுறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.