அரக்கோணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை!

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை!;

Update: 2025-05-29 04:14 GMT
அரக்கோணம் பழனிபேட்டை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 53). இவர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடற்படை ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (45). இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. குமார் ஆந்திராவில் தங்கி வேலை செய்து வருவதால் ரேவதி தனது குழந்தையுடன் தனி யாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரேவதி தனது குழந்தையுடன் வெளியே சென்றுவிட்டு மீண்டும் நேற்று வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகை மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளி விநாயகர் சிலை, வெள்ளி தட்டு, தாம்பூல தட்டு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரேவதி அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.கடற்படை ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருடப் பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News