நரசிங்கநல்லூர் ஊராட்சியில் புதிய நியாய விலை கடை திறப்பு
நியாய விலை கடை திறப்பு;
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தெற்கு ஒன்றியம் நரசிங்கநல்லூர் ஊராட்சி தீன் நகர் பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பு நிகழ்ச்சி இன்று (மே 29) நடைபெற்றது. இதில் மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நியாயவிலைக் கடையை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.