நகர்மன்ற கூட்டத்தில் மூன்று கவுன்சிலர்கள் தர்ணா
நகர்மன்ற கூட்டத்தில் மூன்று கவுன்சிலர்கள் தர்ணா;
. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று நகர மன்ற கூடத்தில் நடைபெற்றது திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் அருள் முன்னிலை வகித்தார் திருச்செங்கோடு நகர மன்ற தலைவரின் தனி தீர்மானமாக மதுரையை எரித்த கண்ணகி திருச்செங்கோடு மலையில் மோட்சம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் திருச்செங்கோடு நகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் சிலப்பதிகாரக் கோட்டம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது இதனை அடுத்து எட்டாவது வார்டு பாஜக கவுன்சிலர் தினேஷ் பேசும்போது தங்களது பகுதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது இந்த பணிகள் எப்போது முடிக்கப்படும் என கேள்வி எழுப்பினார். 1வது வார்டு திமுக கவுன்சிலர் மாதேஸ்வரன் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த பகுதியில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது எப்போது பணிகள் நிறைவடையும் மூன்று வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து பேசியவுடன் சட்டமன்ற உறுப்பினர் எங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் இந்த திட்டம் உங்கள் பகுதியில் வராது என உத்தரவாதம் கொடுத்துள்ளார் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளது என்பதை விளக்க வேண்டும். அதுவரை நாங்கள் தரையில் அமர்ந்து தர்ணா செய்கிறோம் என தரையில் அமர்ந்து 1வது வார்டு கவுன்சிலர் மாதேஸ்வரன் எட்டாவது வார்டு கவுன்சிலர் தினேஷ் ஏழாவது வார்டு கவுன்சிலர் கலையரசி ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் அருள போராட்டத்தை கைவிட்டு அமருமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு செவிசாய்க்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனிடையே இரண்டாவது வார்டு அதிமுக நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசும் போது உறுப்பினர்களின் போராட்டம் நியாயமானது இதனை நகர மன்ற தலைவர் பரிசீலனை செய்து அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த வார்டு கவுன்சிலர்களை வைத்துக் கொண்டு பேசுவது நல்லது மேலும் சிலப்பதிகார கோட்டம் அமைக்க நகர மன்ற தலைவர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்கள் நாங்கள் வரவேற்கிறோம் எனக் கூறினார். இந்தப் பிரச்சனையில் திமுக அதிமுக பாஜக என பிரித்து பார்க்காமல் பொதுமக்களுக்கு நன்மையை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூட்டம் நிறைவு பெற்றது. நகர மன்ற கூடத்தில் அமர்ந்திருந்த நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி வாயிலில் பொதுமக்களுடன் சேர்ந்து தர்ணா மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நகர மன்ற தலைவர் ஷாலினி சுரேஷ் பாபு நகர மன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தி திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் சென்னையில் உள்ளார். அவர் வந்ததும் இது குறித்து அவரிடம் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கலாம் என கூறியதை அடுத்து பொதுமக்கள் சார்பாகவும் பாதிக்கப்பட்ட நகராட்சி உறுப்பினர்கள் சார்பாகவும் மனு வழங்கப்பட்டது. தர்ணா மற்றும் முற்றுகை போராட்டம் காரணமாக நகராட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது