நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயலக குழு கூட்டம் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் உதய தினமான ஜூன் 21ஆம் தேதி அன்று 17வது ஆண்டு துவக்க விழாவை புறநகர் மாவட்டம் முழுவதும் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.