திருநெல்வேலி சிறுமிக்கு துணை முதலமைச்சர் பாராட்டு
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்;
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆறு வயது சிறுமியான லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ் இமயமலையில் மலையேற்றம் மேற்கொண்டு 5364 மீட்டர் உயரம் ஏறி எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்து சாதனை படைத்தார். இந்த சிறுமியை இன்று (மே 29) தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பாராட்டி இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்க வாழ்த்து தெரிவித்தார்.