ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு
ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு;
ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு & கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழு தலைவர் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும், தேவைப்படும் திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீ லேகா தமிழ் செல்வன், ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குனர் பாபு, கூடுதல் காவல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் சுதா, குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.