மேல்பாக்கம் அருகே இருளர் குடியிருப்பை திறந்து வைத்த முதல்வர்
இருளர் குடியிருப்பை திறந்து வைத்த முதல்வர்;
மேல்பாக்கம் பகுதியில் ரூபாய் 6 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் 41 இருளர் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா குத்துவிளக்கு ஏற்றினார், மேலும் விழாவில் அரக்கோணம் வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.