கடலூர்: இன்று பதிவான மழை நிலவரம் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது.;
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று (29.05.2025) காலை 8.30 மணி நிலவரப்படி புவனகிரி பகுதியில் 7 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 3 மில்லி மீட்டர், லால்பேட்டை 2.2 மில்லி மீட்டர், பெலாந்துறை 2.2 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் தலா 1 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.4 மில்லி மீட்டர், கடலூர் 0.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.