வேட்டைக்கு சென்றவர் கைது

கைது;

Update: 2025-05-30 05:10 GMT
சங்கராபுரம் பகுதியில் வனவிலங்குகள் மற்றும் பறவைகளை சமூக விரோதிகள் வேட்டையாடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் அப்பகுதியில், அந்த உயிரினங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை வரகூர் காட்டு கொட்டாயில் ரோந்து சென்றனர். அப்போது கையில் நாட்டு துப்பாக்கியுடன் நபர் ஒருவர் விலங்குகளை வேட்டையாட, நடந்து சென்று கொண்டிருந்தார்.உடனடியாக மடக்கிப்பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் வைத் திருந்த கைப்பை யில், வெடிபொருளை வெடிக்க செய்ய பயன்படும் சாதனமான டெட்டனேட்டர் -20; மற்றும் ஜெலட்டின் குச்சி எனும் வெடிபொருட்கள் -9; இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் விசாரணையில், அவர் வரகூரை சேர்ந்த சக்கரியாஸ் மகன் அருள்ராஜ் 43; என தெரிய வந்தது. அவரை உடனடியாக கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த அனுமதி இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News