மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

முகாம்;

Update: 2025-05-30 05:27 GMT
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் காமராஜ், காது, மூக்கு, தொண்டை டாக்டர் கணேஷ்ராஜா, மனநல டாக்டர் சிலம்பரசன், கண் டாக்டர் சுரேஷ்குமார், முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், 68 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் 45 பேருக்கு, தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

Similar News