திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அருகில் இன்று நெல்லையை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் சென்டர் மீடியினில் இடித்து வலது பக்கம் பாய்ந்து மற்றொரு காரில் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து குறித்து பணகுடி காவல் ஆய்வாளர் ராஜாராம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.