வெண்ணலை அருகே,டூவீலர் மீது தனியார் ஈச்சர் பேருந்து மோதி விபத்து.இளைஞர் படுகாயம்.
வெண்ணலை அருகே,டூவீலர் மீது தனியார் ஈச்சர் பேருந்து மோதி விபத்து.இளைஞர் படுகாயம்.;
வெண்ணலை அருகே,டூவீலர் மீது தனியார் ஈச்சர் பேருந்து மோதி விபத்து.இளைஞர் படுகாயம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, வயலூர், தேவசிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் லோகேஸ்வரன் வயது 22 . இவர் மே 29ஆம் தேதி காலை 8:30- மணி அளவில் , உப்பிடமங்கலம் - சேங்கல் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வெண்ணலை பாலம் அருகே வந்தபோது , எதிர் திசையில் தனியார் ஈச்சர் பேருந்து வேகமாக வந்து லோகேஸ்வரன் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த யோகேஸ்வரனை மீட்டு கோவையில் உள்ள மெடிக்கல் சென்டரில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இச்சம்பவம் அறிந்த யோகேஸ்வரனின் உறவினர் தேவசிங்கம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 43 என்பவர் அளித்த புகாரில் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் , ஈச்சர் பேருந்தை வேகமாகவும் அஜாகாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.