தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-IV & VAO மற்றும் TNUSRB SI தேர்விற்கான மாதிரி தேர்வு நாளை (31.05.2025) காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் புகைப்படம்-2, ஆதார் அட்டை நகலுடன் போட்டித் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.