பேருந்து நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜை!
தொரப்பாடி பகுதி 56 வது வார்டு பெண்கள் சிறைச்சாலை அருகே பேருந்து நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது;
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொரப்பாடி பகுதி 56 வது வார்டு பெண்கள் சிறைச்சாலை அருகே பேருந்து நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர திமுக செயலாளர், வேலூர் சட்ட மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பூமி பூஜை போட்டு பணியினை தொடங்கி வைத்தார். அப்போது பகுதி கழக செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.