திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்றைய (மே 31) நிலவரப்படி மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 91.66 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 118.45 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 144.75 அடியாகவும் உள்ளது.