ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலருடன் ஆசிரியர்கள் சந்திப்பு

முதன்மை கல்வி அலுவலருடன் ஆசிரியர்கள் சந்திப்பு;

Update: 2025-05-31 06:07 GMT
ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜி.சரஸ்வதி. அவர் இன்று (சனிக்கிழமை) பணி ஓய்வு பெறஉள்ளார். இந்த நிலையில் அவரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெ.சரவணன், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ச.விஜய்லட்சுமி, ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கி.வைத்தியநாதன், மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வே.சுரேஷ்பாபு ஆகியோர் சந்தித்து கல்விப் பணிகள் குறித்து கலந்துரையாடினர். அப்போது ராணிப் பேட்டை மாவட்ட மகளிர் அணி தலைவி ரா.சி.வாசவி, கல்வி மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆ.கெஜலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News