ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

சுற்றுச்சூழல் குறித்த புகார்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம்;

Update: 2025-05-31 06:11 GMT
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் குறித்த தங்களது புகார் மனுக்களை எளிதில் அளிக்க வசதியாக இணையதள அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. மேலும் மாவட்ட கலெக்டர் விதிகளை மீறி நீர்நிலைகள், நிலங்களில் கழிவுநீர் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை மூலம் கழிவுநீர் வெளியேற்றபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு, செயல் பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் www.tnpcb.gov.in/tnolgprs என்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் பதிவு செய்யலாம். அல்லது மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழுவிடம் தங்களது புகார் மனுக்களை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News