ராணிப்பேட்டை எந்திர நெல் நடவுக்கு மானியம்!
எந்திர நெல் நடவுக்கு மானியம்!;
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சொர்ணவாரி பருவ நெல் சாகுபடி சுமார் 16,700 ஹெக்டேர் பரப்பு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள குறுவை தொகுப்பு மானியம் போல் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இக்குறுவை தொகுப்பில் எந்திர நெல் நடவு சாகுபடியை ஊக் குவிக்கும் வகையில் ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இத்தொகுப்பில் நெல் விதைகள், நெல் நுண்ணூட்ட கலவைகள் மற்றும் உயிர் உரங்கள் ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு குறுவை தொகுப்பு மானியம் முன்னுரிமையில் வழங்கப்படும். எனவே, விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் எண், கணினி சிட்டா, வங்கி கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.உழவன் செயலில் பதிவு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.நடப்பாண்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறுவை தொகுப்பு அரசு மானியத்தினை விவசாயிகள் முழுமை யாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.