சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் சேர்க்கை

விண்ணப்பங்கள் பெற உதவி மையம் தொடக்கம்;

Update: 2025-06-01 04:04 GMT
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துறைகள் மற்றும் பெரியார் பல்கலைக்கழக உட்பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மையம் தர்மபுரி ஆகியவற்றில் 2025-26-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பெரியார் பல்கலைக்கழக இணையதளத்தில் www.periyarunivers.ac.in வழியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி ஜூன் 16-ந் தேதி வரை வழங்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை துறை வாரியாக சமர்ப்பிக்க ஜூன் 23-6-25 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள 27 துறைகளுக்கும் முதுநிலை பட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த படிப்பு, முதுகலை பட்ட படிப்பு, மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்குகாக மொத்தம் 46 படிப்பு மையங்களுக்கு மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறுவதற்கு உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சேர்க்கை விவரங்கள் குறித்து நேரில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல் பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News