சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு 103 பயனாளிகளுக்கு ரூ.28.38 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மா.மதிவேந்தன்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , மாவட்ட ஆட்சியர் தலைமையில், மேயர் .து.கலாநிதி முன்னிலையில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு 103 பயனாளிகளுக்கு ரூ.28.38 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
ஐக்கிய நாடுகள் சபை 18, டிசம்பர் 1992 அன்று இன, மத அல்லது மொழியியல், தேசிய அல்லது இன சிறுபான்மையினருக்கு பொருந்தும் தனிநபர் உரிமைகள் பற்றிய அறிக்கையை அங்கீகரித்து அறிவித்தது. அதனை நினைவு கூறும் வகையில், இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் முதன் முதலில் 2013-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. சிறுபான்மை சமூகங்களை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் நோக்கமாக கொண்ட ஒரு அடையாள மற்றும் முக்கியமான நாள். இந்த தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் சிறுபான்மையின குழுக்களுக்கு பயன்படுத்தப்படும் மனித மற்றும் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், சிறுபான்மையினரின் வாழ்வாதாரம் முன்னேற மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் -டாம்கோ திட்டம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம், பதிவு பெற்ற வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமா பணியாளர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், கிறித்துவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணி. சிறுபான்மையினத்தவர்களுக்கென இறந்த உடலை அடக்கம் செய்வதற்கென கல்லறைத்தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைத்தல், சிறுபான்மையினர்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மற்றும் சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 49,760 முஸ்லீம், கிறிஸ்துவர், சீக்கியர், ஜெயின் மதம் சார்ந்த சிறுபான்மையினர்கள் உள்ளனர். மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்கங்கள் மூலம் ஆதரவற்ற விதவைகளுக்கு சிறுதொழில் துவங்க உதவி, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் 451 பயனாளிகளுக்கு ரூ.74.35 இலட்சமும், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் 52 பயனாளிக்கு ரூ.10.20 இலட்சமும் சிறுதொழில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.முஸ்லீம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மத்ததினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்த சிறுபான்மையின மக்களுக்கு சுயதொழில் மேற்கொள்ள குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.20.00 இலட்சம் முதல் ரூ.30.00 இலட்சம் வரை டாம்கோ கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1326 பயனாளிகளுக்கு ரூ.6.32 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு கடன் ரூ.1.00 இலட்சத்திலிருந்து தற்போது ரூ.1.50 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் 49 பயனாளிகளுக்கு ரூ.5.98 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், 75 உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களில் உள்ள பழுதடைந்த சுற்றுச்சுவர்களை சீரமைத்தல், புதிய சுற்றுச்சுவர் அமைத்தல், பாதைகள் புனரமைத்தல் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் 51 நபர்களுக்கு ரூ.2.94 இலட்சம் மதிப்பிலும், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை மானியமாக 427 சிறுபான்மையின மாணவியர்களுக்கு ரூ.2.79 இலட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களையும் சிறுபான்மையின மக்கள் பயன்படுத்தி கொண்டு தங்கள் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்தி கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு சிறுபான்மையினருக்கு எப்பொழுதும் ஒரு பாதுகாவலனாகவும், உறுதுணையாகவும் இருக்கும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் முஸ்லீம் உதவும் சங்கம், கிறிஸ்தவர் மகளிர் உதவும் சங்கம் மூலம் சிறு தொழில் தொடங்க 46 பயனாளிகளுக்கு ரூ.8.70 இலட்சம் மதிப்பில் நிதியுதவி, 8 நபர்களுக்கு கிறிஸ்தவ உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய அட்டை, 30 நபர்களுக்கு ரூ.18.55 இலட்சம் மதிப்பில் டாம்கோ கடனுதவி, 3 நபர்களுக்கு ரூ.19,500/- மதிப்பில் இலவச சலவைபெட்டி, 16 நபர்களுக்கு ரூ.93,726/- மதிப்பில் இலவச தையல் இயந்திரம் என 103 பயனாளிகளுக்கு ரூ.28.38 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் .க.பா.அருளரசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் .மு.கிருஷ்ணவேணி, முஸ்லீம் மகளிர் உதவும் சங்க பிரதிநிதிகள் சுல்தான்பாஷா, நாசர்பாஷா, ஷேக்மைதீன், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க பிரதிநிதிகள் .ஜோசப்மணி, திரு.பிரபுசாமுவேல், காஜி கமிட்டி உறுப்பினர்கள் நவீத், பாஷா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.