கடையநல்லூர் நகர் மன்ற கூட்டம் நடந்தது
கடையநல்லூர் நகர்மன்ற கூட்டம் நடந்தது;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர் மன்ற சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. ஆணையாளர் லட்சுமி, உதவி பொறியாளர் அன்னம், மேலாளர் பேச்சிக்குமார், சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் முன்னிலை வகித்தனர். மாரியப்பன் தீர்மானங்களை வாசித்தார். கவுன்சிலர்கள் ரேவதி, பூங்கோதை, சுபா, தனலட்சுமி, கண்ணன், வளர்மதி, முருகன், மாலதி, சந்திரா, மீராள்பீவி , திவான் மைதீன், துர்கா தேவி, முகமது மைதீன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், முத்துலட்சுமி, மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம், தங்கராஜ், வேல்சங்கரி, சங்கரநாராயணன், பாத்திமா பீவி, நிலோபர், பீரம்மாள், அக்பர் அலி, யாசர்கான், முகமது அலி, மகேஸ்வரி, சையது அலி பாத்திமா, நியமன கவுன்சிலர் முகமது மசூது பங்கேற்றனர். கூட்டம் துவங்கியவுடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள நியமன கவுன்சிலர் முகமது மசூதை அறிமுகம் செய்து வைத்தனர். தொடர்ந்து கூட்டத்தில் இந்நகராட்சி பகுதியில் 1 முதல் 33 வார்டுகளிலும் நடைபெற்ற வார்டு சிறப்பு சபா கூட்டம் நடத்தியதில் பொதுமக்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் 79.65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொது நிதியின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது, மேலும் நகர் மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் நேரடி கோரிக்கையை ஏற்று நகராட்சி பகுதியில் பல்வேறு பணிகளை வருவாய் தலைப்பு நிதி, குடிநீர் தலைப்பு நிதி மற்றும் கல்வி நிதியின் கீழ் மேற்கொள்வது உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.