பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ் நடைபெட்ற சோலார் பேனல் விற்பனையாளர்களுக்கு 9-வது மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ப்பு.
நாமக்கல் மாவட்டம், ஜெயா பேலஸில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ் சோலார் பேனல் விற்பனையாளர்களுக்கு 9-வது மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ் சோலார் பேனல் விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் மின்வாரியம் ஒருங்கிணைந்து மாபெரும் சோலார் மேளா கடந்த 18.10.2025 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் சோலார் பேனல் விற்பனையாளர்களுக்கான 9-வது மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசின் திட்டமான சோலார் மின் திட்டத்தில் இணைத்து, வீட்டு மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வீட்டு மின் இணைப்பில் உள்ள மின் நுகர்வோர் சோலார் மின் தகடுகள் மூலம் மின் பயன்பாட்டை குறைப்பதற்கு வழிவகை செய்கிறது. சராசரியாக இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ரூ.1200 மின் கட்டணம் செலத்தும் நுகர்வோர், இத்திட்டத்தின் கீழ் ஒரு கி.வாட்-க்கு மின் தகடுகள் பொறுத்தும்பொழுது, தோராயமாக 60 சதவீதம் வரை மின் கட்டணம் சேமிக்கலாம். ஒரு கி.வாட் மின் தகடுகள் பொறுத்துவதற்கு ரூ.80,000 வரை செலவாகும். செலவீனத்தில் ஒரு கி.வாட்-க்கு ரூ.30000 வரை மானியம் பெறலாம். இரண்டு கி.வாட் மின் தகடுகள் பொறுத்துவதற்கு ரூ.1.40 இலட்சம் வரை செலவாகும். செலவீனத்தில் ஒரு கி.வாட்-க்கு ரூ.60000 வரை மானியம் பெறலாம். மூன்று கி.வாட் மின் தகடுகள் பொறுத்துவதற்கு ரூ.1.80 இலட்சம் வரை செலவாகும். செலவீனத்தில் ஒரு கி.வாட்-க்கு ரூ.78000 வரை மானியம் பெறலாம். சோலார் மின் இணைப்பிற்கு வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். சூரிய மின் உற்பத்தி தகடுகள் சுமார் 27 ஆண்டுகள் வரை உத்திரவாத்த்துடன் செயல்படக்கூடியது. எனவே இத்திட்டத்தில் நீண்ட காலத்திற்கு பயன்பெறலாம். ஒரு கி.வாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி தகடுகள் நாளொன்றுக்கு 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யலாம். உத்தேசமாக ஒரு கி.வாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி தகடுகள் நிறுவப்பட்டால் இருமாத மின் நுகர்வில் 250 முதல் 300 யூனிட்கள் வரை குறைத்து 60 சதவீத மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற www.pmsuyaghar.gov.in என்ற இணைய தளம் வாயிலாக புகைப்படம், மின் கட்டண இரசீது மற்றும் வங்கி கணக்கு விபரம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், இயக்குநர் (தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம், தொழில்நுட்பம், சென்னை) .எஸ்.மங்களநாதன், செயற்பொறியாளர் (பொது) (கரூர் மண்டலம்) .எஸ்.கனிகை மார்தல், முதன்மை மேலாளர் (REC Ltd) .சி.ரமேஷ்பாபு, மேற்பார்வை பொறியாளர் (நாமக்கல் மின்பகிர்மான வட்டம்) பொறி.ஆ.சபாநாயகம், தலைமை பொறியாளர் (கரூர் மண்டலம்) பொறி.த.அசோக்குமார், செயற்பொறியாளர் பொறி.ரா.க.சுந்தரராஜன் உட்பட சோலார் பேனல் விற்பனையாளர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.