நலத்திட்ட உதவி வழங்கும் விழா

விழா;

Update: 2025-06-01 05:17 GMT
சங்கராபுரம் ரோட்டரி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, ரோட்டரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் துணை ஆளுநர்கள் ஜனார்தனன், முத்துக்கருப்பன், ராஜேந்திரன், சுதாகரன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சங்கர் வரவேற்றார். மாவட்ட ஆளுநர் சிவக்குமாரை துணை ஆளுநர் ராமலிங்கம் அறிமுகம் செய்து வைத்து பேசினார். தொடர்ந்து ரோட்டரி சார்பில், சங்கராபுரம் அரசு மருத்துவமனை மற்றும் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தலா ஒரு வீல் சேர் வழங்கப்பட்டது. மேலும் 10 ஏழை பெண்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.விழாவில் இலங்கை மாணவர்கள் கல்வி பயில சங்கராபுரம் ரோட்டரி சார்பில் 30 சைக்கிள்களுக்கான தொகை 1.50 லட்சம் ரூபாய் மாவட்ட ஆளுநரிடம் வழங்கப்பட்டது. இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷினி ரமேஷ், முன்னாள் தலைவி தீபா சுகுமார், முன்னாள் ரோட்டரி தலைவர் ரகுநந்தன், மஞ்சுளா கோவிந்தராஜ், ரோட்டரி தேர்வு தலைவர் மணிவண்ணன், செந்தில்குமார், வெங்கடேசன், திருநாவுக்கரசு மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Similar News