வெளிப்பாளையம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில்
வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்;
நாகை வெளிப்பாளையம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், வைகாசி மாத பெருவிழா கடந்த நேற்று முன்தினம் (30-ம் தேதி) காலை மூலவர் திருமஞ்சனத்துடன் தொடங்கியது. மாலை அனுக்ஞை, பாலிகா பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், திக்பந்தனம், சேனை முதல்வர் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று காலை துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்துடன் வைகாசி மாத திருவிழா தொடங்கியது. முன்னதாக, திருக்கொடிக்கு தீப தூப ஆராதனை நடைபெற்றது. நாளை (2-ம் தேதி) இரவு தொடங்கி வருகிற 6-ம் தேதி வரை அம்ச வாகனம், சேஷ வாகனம், கருடவாகனம், அனுமார் வாகனம், யானை வாகனம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் எழுந்தருள வீதியுலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 9-ம் தேதியும், 11-ம் தேதி மாலை திருக்கல்யான உற்சவமும் நடைபெற உள்ளது. வருகிற 10-ம் தேதி இரவு துவஜா அவரோகணம் எனப்படும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில், நாலாயிர திவ்ய பிரபஞ்ச சேவை நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் தக்கார் அ.சிவானந்த பாதிரதி, செயல் அலுவலர் வி.அசோக்ராஜா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.