அண்ணன் நகர் பிரிவு அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. குழந்தை உள்பட இருவர் படுகாயம்.

அண்ணன் நகர் பிரிவு அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. குழந்தை உள்பட இருவர் படுகாயம்.;

Update: 2025-06-01 09:52 GMT
அண்ணன் நகர் பிரிவு அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. குழந்தை உள்பட இருவர் படுகாயம். கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகா எண் புதூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் வயது 62.அதே பகுதியைச் சேர்ந்த கவியரசு மகள் நார்த்திகா வயது 2. இவர்கள் இருவரும் மே 29 ஆம் தேதி காலை 10 மணி அளவில் , மன்மங்கலம் - என் புதூர் செல்லும் சாலையில் டூவீலரில் சென்றனர். இவர்களது வாகனம் அன்னை நகர் பிரிவு அருகே வந்த போது, எதிர்திசையில் அருகில் உள்ள நன்னியூர் , துவாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் வயது 64 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் , செல்லப்பன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் செல்லப்பன் மற்றும் இரண்டு வயது குழந்தைக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த பாலுசாமி என்பவர் அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , காரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுந்தரம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Similar News