முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட மாவட்டச் பொறுப்பாளர் அறிக்கை
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட மாவட்டச் பொறுப்பாளர் அறிக்கை;
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாளில் நாமக்கல் மேற்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி அறிக்கை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாளில் நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய நகர பேரூர் களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி வேண்டுகோள் விடுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுளள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இனத்தின் தலைவராக நவீன தமிழகத்தின் சிற்பி நம் நினைவில் வாழும் முத்தமிழறிஞர் டாக்டர் தலைவர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாளினை முன்னிட்டு, நாமக்கல் மேற்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர்களில் கழக இரு வண்ணக் கொடி ஏற்றி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கழக மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும், முத்தமிழறிஞர் டாக்டர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாடும் வகையில் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் நலதிட்ட உதவிகள் வழங்கவும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்குதல், மரக்கன்று நடுதல், ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குதல், என பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாமக்கல் மேற்கு மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும், மேலும் அனைத்து வார்டு, கிளைகளிலும் வழங்குகின்ற நலத்திட்ட உதவிகளின் புகைப்படங்களை மாவட்ட கழக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.