தூய்மை பணியாளர் மருத்துவ முகாம்!
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வேலூர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது;
வேலூர் மாநகராட்சி 3ம் மண்டலத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வேலூர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமை நகர்நல அலுவலர் பிரதாப்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பல் உள்ளிட்டவற்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பணியின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.