வேலூர்: பேருந்தில் நகை திருடிய பெண்கள்!

வேலூரில் பேருந்தில் நகை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-06-01 16:25 GMT
வேலூர் அம்முண்டியை சேர்ந்த மல்லிகா (57). இவர் அம்முண்டியில் இருந்து வேலூர் நோக்கி பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அந்த பஸ்சில் 2 பெண்கள் மல்லிகா அருகே அமர்ந்து அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே வந்தனர். அப்போது மல்லிகா தனது கைப்பையில் வைத்திருந்த 4 சவரன் தங்க நாணயம் திருடு போனது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிந்து முனிலட்சுமி (55), அமுலு (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Similar News