செல்லியம்மன் கோயிலில் காப்புகட்டும் நிகழ்ச்சி!
அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோவிலில் இன்று செல்லியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.;
வேலூர் மாவட்டம் இறைவன்காடு, காட்டுகொல்லை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோவிலில் இன்று செல்லியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வரும் ஜூன் 3ஆம் தேதி பால்குடம் எடுக்கும் விழா நடைபெற உள்ளது. அதற்கு இன்று பால்குடம் எடுக்கும் அனைவருக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி சென்றனர்.