காவேரிப்பாக்கம் லட்சுமி ஹோண்டா, டயர்ஸ் மற்றும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காவேரிப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் நேற்று பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஹோண்டா ஸ்டோரூமில் நடைபெற்றது. லட்சுமி ஹோண்டா மற்றும் டயர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வேடராஜன் தலைமை தாங்கினார். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் தீபக், பாணாவரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், காவேரிப்பாக்கம் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சிட்டிபாபு, நகர செயலாளர் குட்டி என்கிற ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ் வரவேற்றார். காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் கலந்து கொண்டு ரத்ததானம் செய்வதால் எற்படும் நன்மைகள் குறித்து விளக்கி, ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். மேலும் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இதில் காவேரிப்பாக்கம் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்து அலுவலர் பாலாஜி, சிட்டி யுனியன் வங்கி மேலாளர் பார்த்திபன், சுகாதார ஆய்வாளர் முத்துவேல், முன்னாள் சுகாதார ஆய்வாளர் குமார் மற்றும் தன்னார்வலர்கள், லஷ்மி ஹோண்டா, டயர்ஸ், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக மேலாளர் வேலாயுதம் நன்றி கூறினார்.