கரூரில் மாணவ - மாணவிகளுக்கு பாடநூல்கள் சீருடை வழங்கி வாழ்த்தினார் ஆட்சியர்.
கரூரில் மாணவ - மாணவிகளுக்கு பாடநூல்கள் சீருடை வழங்கி வாழ்த்தினார் ஆட்சியர்.;
கரூரில் மாணவ - மாணவிகளுக்கு பாடநூல்கள் சீருடை வழங்கி வாழ்த்தினார் ஆட்சியர். கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்,பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாடநூல்கள் சீருடைகள் மற்றும் மாணவ - மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கான பாடநூல், சீருடை, பேனா, பென்சில், ஷூ சாக்ஸ், புத்தகப் பை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி,பின்னர் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர்,மாநகராட்சி ஆணையர்,அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.