மாணவ மாணவிகளுக்கு பூ மற்றும் பள்ளி பாட புத்தகங்கள் வழங்கி வரவேற்ற நகர மன்ற தலைவர்
மாணவ மாணவிகளுக்கு பூ மற்றும் பள்ளி பாட புத்தகங்கள் வழங்கி வரவேற்ற நகர மன்ற தலைவர்;
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று துவங்கப் பட்டது.திருச்செங்கோடு நகராட்சி பள்ளிகளான மலையடிவாரம் நடுநிலைப்பள்ளி கூட்டப்பள்ளி நடுநிலைப்பள்ளி சட்டையம்பதூர் நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட நகராட்சி பள்ளிகளில் வகுப்புகளுக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றதோடு சீருடை புத்தகம் ஆகியவற்றை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர் . மலையடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே படித்துகொண்டிருக்கும் 230 மாணவ மாணவிகள் மற்றும் புதிதாகச் சேர்ந்த 11 மாணவ மாணவிகள் என 241 மாணவ மாணவிகளுக்கும், அங்கன்வாடியைச் சேர்ந்த 40 குழந்தைகளுக்கும், சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் நகராட்சி பகுதிகளில் உள்ள நகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும்புதிதாகச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கும்நோட்டு புத்தகம்,சீருடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் சுரேஷ்குமார் பழனிச்சாமி மலை அடிவாரம் பள்ளி தலைமையாசிரியர் ஹரிகரன் நகர் மன்ற உறுப்பினர்கள் மைதிலி காந்தி,மனோன்மணி சரவணன் முருகன் சண்முக வடிவு திவ்யா வெங்கடேஸ்வரன் அசோக் குமார் அடுப்பு ரமேஷ் முருகேசன், மகேஸ்வரி சினேகா ஹரிகரன் புவனேஸ்வரி உலகநாதன் ராதா சேகர் செல்லம்மாள் தேவராஜன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.