பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கிய எம் எல் ஏ
பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கிய எம் எல் ஏ;
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா பள்ளி பாட புத்தகம் மற்றும் நோட்டு மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாபு ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு, இலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி ராமச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமாரி, வட்டாட்சியர் சரவணன், ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுஜாதாபாரதிபாபு, தலைமை ஆசிரியர் புகழேந்தி, ராஜேந்திரன், கே.எஸ்.ஆர்.கார்த்திக், ரங்கநாதன், ராமநாதன், ராமமூர்த்தி,நெருப்பு ரவி,செந்தில் ராஜா, மனோகரன்,வெங்கடேசன், வட்டார கல்வி அலுவலர் பாபு இளமாறன்,அர்ஜுனன் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்