காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடிகள் உள்ளதால் பேராசிரியர்கள் பல்கலைக்கழக ஊழியர்கள், ஓய்வு ஊதியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.இதனால் பல்கலைக்கழகங்களில் அவ்வப்போது ஓய்வூதியர்கள் பேராசிரியர்கள் பல்கலைக்கழக பணியாளர்கள் என ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜூன் 2) மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முன்னாள் ஓய்வூதியர்கள் தங்களுக்கு மே மாதம் வழங்க வேண்டிய ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதை கண்டித்து பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஓய்வூதியர் சங்க ஊழியர்களுக்கு ஆதரவாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசியர்கள் சங்கம் , மூபா சங்கம், பல்கலைகழக பணியாளர்கள் சங்கம் ஆகியவை ஒய்வூதிய சங்கத்தினருக்கு ஆதரவளித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளரிடம் கோரிக்கை மனுவை அளித்து உடனடியாக ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.