அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய ஆட்சியர்

தர்மபுரி அவ்வையார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாடநூல்கள் சீருடை கலெக்டர் சதீஸ் வழங்கினார்.;

Update: 2025-06-02 10:18 GMT
தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு பாடநூல்கள், சீருடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் அங்ன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் போது .தமிழ்நாடு அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை பள்ளிக் கல்வி துறை மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்க வழங்கி வருகிறது. இதை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும். கல்வியின் சிறப்பு குறித்து நமது இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மிக்க கல்வி அளிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் சிறந்த கல்வி பயில்வதில் ஆசிரியர் பெருமக்களுக்கும் முக்கிய பங்குள்ளது. தற்போதிய நவீன காலக் கட்டத்தில் ஆசியர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த பள்ளி கல்வித் திட்டத்திற்கும் தற்போதுள்ள பள்ளி கல்வி பாடத்திட்டத்திற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது. தற்போது நவீன தொழிற் நுட்பங்களுக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வது மிக அவசியமாகிறது.ஆசிரியர்கள் படித்தவைகளை பள்ளி மாணவ-மாணவிகளுக்க எளிமையாக கற்றுக்கொடுக்க வேண்டும். தமிழக அரசு கொண்டுவந்துள்ள நவீன வகுப்பறைத் (Smart Class Room) திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் திட்டமாகும். இந்த வகுப்பறைகள் மூலம் உலகத்தில் நடைபெறும் அனைத்து அறிவியில் நிகழ்வுகளையும், பள்ளிக் கல்விக்கு தேவையான அனைத்துத் தகவல்களையும் மாணவர்கள் அறியமுடியும். இதை மாணவர்களுக்கு சிறப்பாக கொண்டு சேர்க்கும் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதில் தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களை காட்டிலும் முதன்மையாக உள்ளது. குறிப்பாக உலகதரம் வாய்ந்த கல்வியை அரசு மாணவர்களுக்கு அளித்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்க அனைத்து விதமான நலத்திட்டங்கள், நவீன வகுப்பறை வசதிகள், பாடத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை சிறப்பாக வழங்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் முதல் நாளில் பள்ளிக்கு வருகை புரிந்துள்ள மாணவ-மாணவிகளுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன் தர்மபுரி நகரமன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாத. தர்மபுரி நகர செயலாளர் நாட்டார்மாது தர்மபுரி ஒன்றிய செயலாளர் காவேரி நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ணன் வைகுண்டம். சண்முகம் தர்மபுரி நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு செயலாளர் குமார். பள்ளியில் தலைமை ஆசிரியர் சுதா பள்ளி தலைமை துணை ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News