தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு- போலீசார் விசாரணை!
10 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக தடுப்பணை கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி உயிரிழந்தார்.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கவசம்பட்டு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த கோதண்டன் - சுப்புலட்சுமி தம்பதியினரின் 10 வயது மகன் பவன்குமார் இன்று எதிர்பாராத விதமாக தடுப்பணை கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் காவல் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.