சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!
மேல்பாடி அருகே உள்ள சாலையை சீர் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே உள்ள சாலையை சீர் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குண்டும் ,குழியுமாக மாறியுள்ள சாலை, போக்குவரத்திற்கும் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் பெரும் தொந்தரவாக உள்ளது. உடனடியாக சாலை சீரமைப்புக்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.