மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2025-06-03 12:46 GMT
அரியலூர், ஜூன் 3- மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அரியலூர் மாவட்ட திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. வாலாஜா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, கேக் வெட்டி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து அவர், போக்குவரத்து பணிமனை முன் தொமுச சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட அவர், கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  தொடர்ந்து அண்ணாசிலை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்டஉதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகர திமுக செயலர் முருகேசன், ஒன்றியச் செயலர் தெய்வ.இளையராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம்:ஜெயங்கொண்டம் அடுத்த இடையார் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கு மு.கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்த அமைச்சர் சிவசங்கர், கிராம கோயில் அர்ச்சகர் சங்கத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதே போல், திருமானூர் உடையார்பாளையம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்சிவசங்கர் கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் சட்டதிட்ட திருத்தக் குழு இணைச் செயலர் சுபா.சந்திரசேகர், சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியன், ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தன.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :

Similar News