ஸ்ரீ சக்தி கணபதிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு!
வெள்ளியால் அமைக்கப்பட்ட ஸ்ரீ சக்தி கணபதிக்கு புதன்கிழமையை முன்னிட்டு இன்று பல வகையான அபிஷேகம் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் அரியூரில் ஸ்ரீ லட்சுமி நாராயணி கோவிலில் உள்ள வெள்ளியால் அமைக்கப்பட்ட ஸ்ரீ சக்தி கணபதிக்கு புதன்கிழமையை முன்னிட்டு இன்று பல வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.