போளூரில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாள் விழா.

போளூரில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் மாபெரும் ஊர்வலம். ;

Update: 2025-06-04 18:40 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் 102வது பிறந்தநாள் முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் ஊர்வலத்தை துவக்கினர். பின்னர் நகரின் முக்கிய வீதியான பேருந்து நிலையப் பகுதி டைவர்ஷன் ரோடு உள்ளிட்ட பகுதியில் வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணி வேந்தன் தலைமையிலும் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் முன்னிலையிலும் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். அதனை தொடர்ந்து போளூர் பணிமனை அருகே தொமுச சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் தனியார் திருமண மண்டபத்தில் தூய்மை பணியாளர்களுக்கும் , பொது மக்களுக்கும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர். அதனைத் தொடர்ந்து பஜார் வீதி அருகே திமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார், ஜோதி, மாவட்ட அவைத்தலைவர் ராஜ்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி சேகரன், எதிரொலி மணியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.வி. ராஜ்குமார், நகர செயலாளர் தனசேகரன், நகராட்சி தலைவர் ராணி சண்முகம், இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார், மாவட்ட அயலக அணி தலைவர் சண்முகம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் எழில்மாறன், மனோகரன், பெரணமல்லூர் மனோகரன், ஒப்பந்ததாரர் சங்கர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் தொமுச நிர்வாகி ராஜரத்தினம், வார்டு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News