வாலாஜாவில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது!
வாலாஜாவில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது!;
வாலாஜா கீழ் புதுப்பேட்டையில் பாரதி (வயது 45) என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதேபோல் புதுக்குடியானூர் சென்று அங்கே தம்பதியான அண்ணாமலை மற்றும் அவரது மனைவி ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பாலு (30)என்பவரை வாலாஜா போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா பரிந்துரையின்பேரில், பாலுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சந்திரகலா ஆணை பிறப்பித்தார்.