நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் TT.பரந்தாமன் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் அம்மா திருச்செங்கோடு நம்ம அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.இதைத்தொடர்ந்து பள்ளியில் பயிலும் NCC மாணவர்களுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் தலைவருமான திரு TT பரந்தாமன் அவர்கள் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அடுத்ததாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பொருளாளர் கணேஷ்குமார் அவர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு உரையை வழங்கினார். அதைத்தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இறுதியாக பள்ளியின் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியானது மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் திரு TT பரந்தாமன், பள்ளி ஆசிரியர்கள் செயலாளர் சதீஷ்குமார், துணைத் தலைவர் மகேஷ் குமார், பொருளாளர் கணேஷ்குமார் மற்றும் வெங்கட்,ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.