ஆட்சியர் தூய்மைப்பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு
தூய்மைப்பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு;
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (05.06.2025) தூய்மைப்பணிகளை துவக்கி வைத்து அனைத்து அரசு அலுவலகங்களில் நடைபெற்ற தூய்மைப்பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, நிலையான கழிவு மேலாண்மைக்காக தூய்மை இயக்கம் என்ற மாநில அளவிலான திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்திட தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான தூய்மை மிஷன் குழு கூட்டம் (19.05.2025) அன்று நடத்தப்பட்டு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அனைத்து மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அரசு அலுவலகங்களிலும் தூய்மை இயக்கம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டது. மேலும், 03.06.2025 அன்று மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு பயன்பாடற்ற பொருட்கள், பேப்பர், பிளாஸ்டிக் கழிவுகள் அடையாளம் காணப்பட்டது. 04.06.2025 அன்று தூய்மை நடைப்பயணத்தில் அடையாளம் காணப்பட்ட பயன்பாடற்ற பொருட்கள் மற்றும் கழிவுகளை சேகரிப்பவர்களை அடையாளம் கண்டு தூய்மை மிஷன் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகம் மற்றும் வட்டார அளவிலான அலுவலகங்களில் இன்றைய தினம் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்க்கொள்ள நடைவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து அரசு அலுவலர்களும் இணைந்து ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்க்கொள்ளப்பட்டது. பயன்பாடற்ற பொருள்கள் தரம் பிரிக்கப்பட்டு கழிவு பொருள் சேகரிப்பவரிடம் ஒப்படைக்க தயார் நிலையில் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணியில் மொத்தம் 5.4 டன் பயன்பாடற்ற பொருட்கள் சேகரிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் (தூய்மை மிஷன்) / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை) திரு.மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சீ.ஜெயச்சந்திரன், அனைத்து உதவி திட்ட அலுவலர்கள், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.