பெத்தநாடார்பட்டியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா

மேல்நிலை நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது;

Update: 2025-06-06 02:12 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பெத்தநாடார்பட்டி ஊராட்சி, சண்முகபுரம் சுந்தரலிங்கபுரத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் ரூ.30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் ஜெயராணி கலைச்செல்வன் தலைமை வகித்தார். இதில் ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர் ராதா, ஊராட்சி செயலர் ஜெயசிங் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கட்சி நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News