அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு

கலந்தாய்வு;

Update: 2025-06-09 03:37 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த, 3ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், கடந்த, 4ம் தேதி கலை மற்றும் 5ம் தேதி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு தரவரிசை மதிப்பெண் அடிப்படையில் நடந்தது. தொடர்ந்து வரும் 9, 10 ஆகிய நாட்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது. 9ம் தேதி தமிழ், ஆங்கிலம், பி.காம்., வணிகவியல் கலந்தாய்வு நடத்தப்படும். மேலும் 10ம் தேதி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு வேதியியல், கணினி அறிவியல், இயற்பியல், கணிதம் ஆகியவைகளுக்கு நடக்கிறது. தரவரிசை மதிப்பெண், இனசுழற்சி மற்றும் காலி இடங்களின் அடிப்படையில் சேர்க்கை கலந்தாய்வு நடக்கும் என கல்லுாரி முதல்வர் தர்மராஜா தெரிவித்துள்ளார்.

Similar News