மாணவர்களுக்கு உயர்கல்வி கலெக்டர் அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்;

Update: 2025-06-09 04:05 GMT
கள்ளக்குறிச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், 164 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் பிளஸ்2, பிளஸ்1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டினை உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.மேலும், கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, உடனடி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற செய்ய வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் பிரசாந்த் பேசுகையில், 'மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும்,' என்றார். இதில், கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News